POST: 2017-10-14T14:49:55+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-103
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

இல்லற ஜோதி, 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஏ. தங்கவேலு, எஸ். ஏ. அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் பாடல்கள், வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தின் நிறைவு நெருங்கும்போது, “உனக்கும் எனக்கும் உறவு காட்டி இந்த உலகம் சொன்னது கதையா” என்று ஒரு பாடல் வரும். அந்தப் பாடல், பத்மினி பாடுவார்கள். இது என் உள்ளத்தை உருக்குகிறது அண்ணா என்று நான் சொன்னபோது, திரும்பிப் பார்த்தேன், கவியரசர் கண்ணதாசன் கண்களில் கலங்கிய நீர் அவர் கன்னத்தில் வழிந்தது.

இந்தப் பாடல், எவருக்கும் ஏதேனும் ஒரு நேரத்தில் பொருத்தமாக இருக்கும். எனக்கு எத்தனையோ நினைவுகளை இந்தப் பாடல் கூறுகிறது என்று கூறினார். அதை நினைவில் வைத்துக்கொண்டு, ஏ ஔவை, இல்லறஜோதி படம் உனக்கு நினைவுக்கு வருகிறதா? உனக்கும் எனக்கும் உறவு காட்டி இந்த உலகம் சொன்னது கதையா என்ற பாடலை மெல்லப் பாடிக் காட்டினார்கள்.

கவியரசருக்கு இனிதையான குரல் இருந்தது. ஈடு சொல்ல முடியாது திறம் இருந்தது. அதுதான் நாங்கள் வழியனுப்பிய நிகழ்ச்சி. சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில், பங்குகொண்டிருந்த சில நாட்களில், கவியரசர் கண்ணதாசன் மறைந்தார் என்ற செய்தி மொழி, கலை, கட்சி வேறுபாடில்லாமல் தமிழகத்திற்குப் பேரிடியாக அமைந்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *