மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-102
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
எப்படி அண்ணா நீங்கள் இந்த இடத்தைக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டேன். நீ தங்குகிற இடம் என்று சொன்னால், அது ஒரு ராஜமாளிகையாக இருக்கும் என்பதை நான் அறிவேன் என்றார். என்ன நீயும் சேதுராமனும் இப்படித் துவங்கி விழித்திருக்கிறீர்கள், சரக்கு போட்டிருந்தால்தான் இப்படிப்பட்ட உறக்கம் அந்தி வேளையில் வரும் என்று கேலி பேசினார்.
ஒரு நல்ல காபியும், சூடான சிற்றுண்டியும் பொங்கல், வடையோ, பஜ்ஜியோ, இருந்தால் போதும் என்றார்.
சிறிது நேரம் கழித்து, ஔவை என்னால் இங்குத் தங்க முடியாது, உங்களுக்குத் தயிர்ச்சாதம் இருந்தால் போதும், என்னை எப்படியாவது ஆலிடே இன்னில் தங்க வையுங்கள். அது, நெடுஞ்சாலை ஓரங்களில் அழகாக இருக்கும் கிளைகளாகும் என்றார்.
நண்பர் பார்த்தசாரதி முகம் கோணாமல் கவியரசர் எங்கே தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கே தங்க வைப்பது எங்களுக்குப் பெருமை என்றார்.
அப்போது வழியனுப்பும்போது, அண்ணா நீங்கள் கொஞ்சம் சோர்வாக இருக்கிறீர்களே என்றேன். ஔவை லண்டனிலேயே எனக்கு உடல் நலம் சரியில்லை. இங்கே நான் டாக்டர் ஜவகரை பார்க்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருடைய நினைவு எவ்வளவு நீளமானது என்று கண்டு நெகிழ்ந்தேன்.
பச்சையப்பர் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர் தலைவனாக நான் இருந்தபோது, நிதி திரட்டுவதற்காக அன்னையார் சௌந்தரம் கைலாசம் அவர்களை அணுகி, இல்லற ஜோதி படத்தை வாங்கித் தந்தார்கள். அந்த நிகழ்ச்சியில், கவியரசர் கண்ணதாசன் அவர்களை அழைத்திருந்தோம். மன மகிழ்ச்சியோடு வந்திருந்த கவியரசருக்குப் பக்கத்தில் நானும், இடது பக்கத்தில் திருமதி சௌந்தரா கைலாசம் அம்மையாரும் அமர்ந்திருந்தார்கள்.

Add a Comment