POST: 2017-09-26T11:31:08+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-93
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================

எங்கள் நட்பு, நன்றியுணர்ச்சியோடும் விருந்தோம்பலிலும் வாடாமல் மலர்ந்தன. கவியரசர் வாலி, கலையுலக நண்பர்களோடு மட்டுமல்லாமல், 60-65 வயதுக்குப் பின்னர்தான், தமிழுலக நண்பர்களைப் பெற்றிருக்க வைத்தது.

எவர் மீதும், எரிச்சல் காட்டாத, பெரிய மனதோடு எல்லோரையும் வாழ்த்தி வரவேற்கிற ஒரு தந்தையின் மனப்போக்கைப் பிறகு வளர்த்துக்கொண்டார்.
ஒருமுறை, புரட்சித்தலைவர் சொன்னாராம், நமக்குப் பிள்ளைகள் பிறப்பதில்லை, பிறந்தாலும் அவர்கள் நமது வெற்றியைப் பெறுவதில்லை. ஏன் என்று கேட்டாராம்.

பிள்ளையை வளர்க்கும் கலை, ஒரு தாயின் தனித்திறமையில் இருக்கிறது. அங்குமிங்குமாக அலைகிற கலைஞர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பிள்ளைகள் அப்படித் தாயை மீறி வந்து தந்தையின் வழியில் வந்து தடுமாறித் தடம் மாறுகிறார்கள் என்று நான் என்னைப் பற்றி சொன்னேன். அதற்குப் புரட்சித்தலைவர், எனக்கு 20 உதாரணங்களைச் சுட்டிக்காட்டிச் சரி என்றார்.
புரட்சித்தலைவர், இப்படி மனம்திறந்து பேசுகிற வாய்ப்புகள் எனக்குப் பலமுறை நேர்ந்தன என்றார் வாலி.

திருவிடைமருதூரில் திருவாசக விழாவில், கோயில் வாயிற்படி வரை வந்து, உள்ளே வராமல், திண்மையில் அமர்ந்திருந்ததும் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஏன் உள்ளே வரவில்லை என்று கேட்டபோது, ஓ! அதுதான் அவரது இயக்கமா? அதுதான் அவரது கழகமா? என்று கேட்டதாக நான் சொன்னதைக் கேட்டு, வாலி இவ்வாறு தொடர்ந்து பேசினார்.

“தளர்ச்சி வருகிறபோது, சுற்றியிருக்கிறவர்கள் எப்படியாவது கவிழ்த்துவிடுகிறார்கள். அது, மறைவாகப் பக்தி வலைக்குள் வீழ்த்திவிடும் போலத் தெரிகிறது. எனக்கும் அவருக்கும் அப்படித்தான்” என்றார் வாலி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *