எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-46
————-
மதிப்புயர்ந்த மனங்கவரும் உணவகங்களை தமிழக அரசே தொடங்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் விரும்பினார். சுற்றுலாத்துறை இந்தப் பணியில் ஈடுபட்டு மாவட்டத் தலைநகரங்களிலும் குறிஞ்சி நகரங்களிலும் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். அந்த வகையில்தான் மதுரை மாநகரில் கட்டப்பட்ட மாளிகையாக தமிழக அரசின் உணவகம் உருவாயிற்று.
திடுமென ஒரு நாள் என்னை அழைத்து இராஜராஜன் என்ற பெயர் வைக்க வேண்டும். உணவகம், விடுதி என்ற பெயர்கள் வேண்டாம். ஓட்டல் என்றே இருக்கட்டும் என்றார். நான் சிரித்துக் கொண்டே, “அண்ணா, வருகிறவர்களை ஓட்டல் என்பது தான் எங்கள் நோக்கம் என்று மாறிவிடக்கூடாது” என்று நாள் சொன்னேன். . அந்தக் கருத்து புரட்சித்தலைவருக்குப் பிடிக்கவில்லை. சரி என்று சொல்லி நான் என்னுடைய அறைக்குத் திரும்பிவிட்டேன்.

Add a Comment