POST: 2017-05-12T10:18:15+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-33
————-

ஏதாவது ஒரு குறள் சொல்ல வேண்டும் என்கிற பதைப்பு ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. (353) என்ற குறளை சொன்னேன். அதை எழுதிவிடுங்கள் என்றேன். இந்த நிகழ்ச்சிக்கும் குறளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டார் ஒரு செயலாளர். வையம் இருக்கிறது, வானம் இருக்கிறது. இவர்கள் விண்வெளி வீரர்கள் தானே என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். நீங்கள் சொல்கிறீர்கள், சரி என்று பதில் சொன்னார் செயலாளர்.

நம்ப மாட்டீர்கள்! ஏழெட்டு மணி இருக்கும். விருந்து நிகழ்ச்சிக்கு என்னை வரச்சொல்லி, முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் போயிருந்தேன். விருந்து முடிந்தபிறகு என்னைக் கூப்பிட்டார் முதலமைச்சர். அந்த குறளுக்கு ஆங்கிலத்தில் பொருள் சொல்லுங்கள் என்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *