எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-31
————-
தொடர்ந்து, பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “எந்த நாட்டில், எந்த நூல் தேசியநூலாக இருக்கிறது. ஒரு மாநிலத்து மொழியில் உள்ள நூலை, தேசிய நூல் ஆக்குவதற்கு, இதற்கு முன் என்னவாய்ப்பிருக்கிறது? ஒரு காலத்தில் தன்னைத் தேடி வருபவர்களிடம், பகவத்கீதை வழங்கும் வழக்கம், ராதாகிருஷ்ணனுக்கு இருந்தது. என்னுடைய தந்தையார் நேரு, அவ்வாறு இந்திய நூல் என்று எதையும் தனியாகச்சொல்லக்கூடாது என்று கூறினார். சிலநேரங்களில் பஞ்சாபியர்கள், தங்களது கிரந்தசாகிப் நூலை, இந்திய தேசிய நூல்என்று கூறினார்கள். உங்களிடம் வேலைபார்க்கும் யாரோ ஒரு செயலாளர், தவறான வழி காட்டிக் கொண்டிருக்கிறார்என்று எண்ணுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இனிமேல் இந்த வேலை செய்யாதீர்கள் என்று என்
முதுகைத்தட்டி, அந்த காகிதத்தைக் கொடுத்து விட்டார் எம்.ஜிஆர். எனவே, புரட்சித்தலைவர் மீது நான் பரிவான உறவை, இப்படித்தான் நான் நினைக்க முடிகிறது.

Add a Comment