POST: 2017-04-29T10:40:48+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-21
————-

புராணப் படங்களில், கடவுள் காட்சி தருகின்ற படங்களில் நடிப்பதில்லை என்ற லட்சியத்தை வைத்திருந்தார் எம்ஜிஆர். இவ்வளவு லட்சியம் வைத்திருந்தவர், உடல்தளர்ச்சியாலோ, நோயாலோ, மனக்கலக்கத்தாலோ மாறிவிட்டார்களே என்பது தான் இன்னும் விளங்காமல் இருக்கிறது.

இப்படிப் பல நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். எங்கு பார்த்தாலும், என்னைத் தமிழ் என்றுதான் கூப்பிடுவார். நான் ஒருமுறை அவரைப் பார்த்துச் சொன்னேன். ‘அண்ணா! எனக்குப் பத்தாண்டுகள் முடிந்து விட்டன. இனிமேல் என்னுடைய ஊதியத்தில் உயர்வு வராது. எனவே பொதுப்பணிக்குச் செல்லலாம் என எண்ணுகின்றேன்’ என்றேன்.

‘அதென்ன பொதுப்பணி? இப்போது ஆற்றுவது, என்ன பணி? என்று கேட்டார். ‘இல்லை, அரசுப்பணி போதும் என் நினைக்கிறேன்” என்றேன் நான்.
‘நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்ன பணி உயர்வு தரலாம்’ என்று சொல்லுங்கள் என்றார் எம்ஜிஆர். ‘நான் யோசித்துச் சொல்கிறேன் அண்ணா” என்று சொல்லிவிட்டு, வந்துவிட்டேன். ரொம்பநாள் கழித்து, ‘நான் கேட்டேன். நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே’ என்று கேட்டார் எம்ஜிஆர். அதன்பின் இதுபற்றி யோசித்து, முதலமைச்சர் எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *