POST: 2017-04-28T10:27:31+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

11 ஜனவரி 2017

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-20
————-

‘முதலமைச்சருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். பகுத்தறிவாளர். ஆகவே, கோவிலுக்கு வர விரும்பவில்லை” அவர் என்று பிரதமரிடம் சொன்னேன். அப்படியா நான்கூடத் திராவிடர் கழகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, விழாவில் கலந்துகொள்ளப் போனார் பிரதமர் மொரார்ஜி தேசாய். ஏன் (இதைக் கூறுகிறேன் என்றால், தன்னைக் கடவுள் மறுப்பாளர் என்று தெள்ளத்தெளிவாக, அவர் சொல்லிக் கொண்டிருந்த காலமும் ண்டு.

இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும். நான் மாணவனாக இருந்த காலம். தன்னுடைய இல்லத்தில் பொங்கல் விழா நடத்துவார் எம்.ஜி.ஆர். பத்து ரூபாய், ஐம்பது, ரூபாய், நூறு ருபாய் என்று அந்தப் பொங்கல்விழாவுக்கு வருகின்றவர்களுக்கு வாரிவாரிக் கொடுப்பார் எம்ஜிஆர். ஒருமுறை நான் கவியரசர் காதாவோடு, அந்த விழாக்காலத்தில் எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போனேன். சுரதா, மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார்.

“என்னைப் பற்றி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று சுரதாவிடம் அடிக்கடி கேட்பார் எம்ஜிஆர். ஒலிக்கும் குரலிலும், சொல்லுகிற சொற்களிலும் ரொம்ப அழகாகப் பேசுகிறவர் புரட்சித்தலைவரின் அண்ணன் எம்.ஜி. சக்ரபாணி. அவர் பேசினால், ஒரு மயக்கம் வரும். வண்டின் ரீங்காரம் போல இருக்கும். அவரிடம் எம்ஜிஆர் பற்றிய பாடலைச் சொன்னார் சுரதா.

‘கண்ணப்பத் திருவேடன் எனும் படத்தில் நடிப்பதற்கு வருவீரா என்று கேட்டால், என்னப்பா, எதற்கப்பா, புராணமப்பா என்று சின்னப்பா கேட்டாரா? இந்நாட்டில் எம்ஜிஆர்தான் கேட்டார்” என்று அந்தப் பாட்டில், ஒரு வரி வரும். எம்.ஜி. சக்ரபாணி கேட்டு மகிழ்ந்ததோடு மட்டுமில்லாமல், ‘தம்பியிடம் இதைக் காண்பியுங்கள். ரொம்ப மகிழ்வான்’ என்று இறுகக் கட்டியணைத்துக்கொண்டு, சுரதாவைப் பாராட்டினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *