பாரத நாடு என்னும் போதினிலே – சேக்ஸ்பியர்,
பாவலர் நாடகம் கண்முன் பார்க்கலாம் நேரினிலே !
நானிலம் முழுவதும் சேக்ஸ்பியரின் நானூறாம் ஆண்டு கொண்டாடப்பெறுகிறது.
எந்த நாடும் தனது சொந்த நாடாக மாற்றிக்கொள்ளும் செழுமையுடையன சேக்ஸ்பியர் நாடகங்கள்
. பிரேசில்,
இந்தியா,
சீனா,
மெக்சிகோ,
துருக்கி
ஆகிய நாடுகள் சேக்ஸ்பியரை பளிங்காக விளங்கி மகிழ்கிறது.
்கிலாந்தை விஞ்சிய அளவுக்கு சேக்ஸ்பியருக்குப் புகழ்ப் பரணி பாடுகிறது.
15 நாடுகளில் 18,000 மக்களை வினவிப் பார்த்ததில் நூற்றுக்கு எண்பத்தி எட்டு பேர் மெக்ஸிகன் நாட்டில் சேக்ஸ்பியர் காதலர்களாக உள்ளனர்.
அவர் பிறந்த நாட்டில் ஐம்பத்தி ஒன்பது விழுக்காட்டினர் தான் ஆர்வத்தோடு சேக்ஸ்பியரைப் பயில்கிறார்கள்.
பிரேசில் நாட்டவரில் 84 % விழுக்காட்டினர் இன்று கூட சேக்ஸ்பியர் என்றும் புலராது அன்று பூத்த மலராக மக்கள் மனத்தில் மனங்கமழ்கின்றார்.
ஆனால் இங்கிலாந்தில் அந்த அளவில் இல்லை.
இந்திய நாட்டில் 83 % ஆர்வத்தோடு சேக்ஸ்பியரை தெளிவாகத் தெரிந்து பாராட்டுகின்றனர்.
எப்படிக் கணக்கிட்டுப பார்த்தார்கள். உலகம் முழுவதும் 100க்கு 65 பேர் சேக்ஸ்பியரில் திளைத்து மகிழ்கிறார்கள்.
பிறந்த நாட்டைவிட்டுப் புகுந்த நாட்டில் தான் சேக்ஸ்பியர் புகழோங்கி இருக்கிறார்.
(பிரித்தானியாவில் 59 % விழுக்காட்டினர்தாம் இடம் பெறுகின்றார்கள்.
கார்லைல் வினவியதற்கு இப்போது நாம் விடை சொல்வதென்றால்,
இந்தியப் பேரரசு இல்லாமற் போனாலும் சேக்ஷ்பியரை நாங்கள் இழக்கமாட்டோம். .
சேக்ஸ்பியர் புகழ் வெல்க !

Add a Comment