இரங்கலுரை -2
மணியொளி மறைந்தது
அரசுத் துறையில் நாணயமும் ஒழுங்கும் கொண்டு நற்பண்புகளின் திலகமாகத் திகழ்ந்த திரு. குப்பு சு.மணி அவர்களின் பிரிவு ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது.
பணியில் ஓய்வு பெற்றதும் வாரந்தவறாமல் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமண்டபத்தில் வந்து பங்கு பெறுவதும் அங்கே நடைபெற்ற பொழிவுகளையெல்லாம் ஆர்வத்தோடு கேட்டு வள்ளலாரைப் பற்றிய சுவையான நூல்களை எழுதிய கரங்கள் அவருடைய கரங்களாகும்.
வெள்ளம் வந்து வீதியில் புரண்டபோது அதற்கு ஆட்பட்ட நாளிலிருந்தே அவலத்துக்கு ஆளாகியிருந்தார்.
அவருடைய மறைவு அடக்கத்துக்கும் பண்புக்கும் வாய்ப்பில்லாமல் வையகத்தை வருந்தச் செய்துள்ளது.
தாமரைத்திரு முனைவர் ஔவை நடராசன்

Add a Comment