POST: 2016-03-15T15:11:24+05:30

இரங்கலுரை -1

மரம் சாயலாம் மாவிலை உதிரலாமா !

பச்சையப்பர் கல்லூரியில் பேராசிரியர் குமரவேலு அவர்களின் ஓர் வகுப்பு இளையவராகப் பயின்றவர் பேராசிரியர் கா.பட்டாபிராமன்.

மாணவர்களுக்குக் கற்றுத்தருவதை ஒரு பெரிய வேள்வியாக நடத்தியவர் திரு.காபரா அவர்கள் காணாமலேயே ஔவையின் பெயரைக் கேட்டால் நான் உருகுவேன் என்று கூறியது மட்டுமில்லாமல் அவ்வாறே நெகிழ்ந்ததையும் நான் நினைத்துத் தவிக்கிறேன்.

மொழியாக்கத்தில் தனி ஆர்வம் காட்டி ஆங்கிலத் மொழித் தொடர்களை எப்படித் தமிழ்ப்படுத்தலாம் என்று அவர் எழுதிய நூல் பக்கத்துக்குப் பக்கம் மொழிக்காதலைக் காட்டி நம்மை உருக வைத்தது.

செவிப்புலன் குறைந்து வருந்தத் தொடங்கினார். ஆனால் சிந்தையெல்லாம் எப்போதும் தமிழ் என்றே செழித்த கருத்துக்களைப் பொழிந்துவந்தார்.

திருவண்ணாமலையில் அவரைக்கண்டு அளவளாவியதையும் விரைந்து என்னை வழியனுப்புவதற்காக வெந்து கொதித்த நிலையில் எனக்கு விருந்தளித்ததையும் நினைத்தால் என் மனம் கொதிக்கிறது.

என்னைவிட அகவையில் இளையவர் அவர்.
மரங்கள் சாயலாம்
மாவிலைகள் உதிர்வதா !

தாமரைத்திரு முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *