ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-11
இந்த அமைப்பை அருமை நண்பர் சுந்தரேசன் அவர்கள் அதற்கு தலைவராகவும் இந்த அமைப்பில் பங்கு கொண்டவர்.
அறிஞர் பலபேர் வாழ்த்துரை அனுப்பியிருக்கிறார்கள். பல நிறுவனங்கள் வாழ்த்துரை அனுப்பியிருக்கிறார்கள்.
அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களுடைய மகன் பொறுப்பேற்றிருக்கிற சக்தி நிறுவனங்கள் சார்பில், அவர் வாழ்த்துரை அனுப்பியிருக்கிறார்.
திருவாரூரில், சீப் மேஜிஸ்டிரேட் என்ற பொறுப்பில் இருக்கும், நண்பர் சத்தியமூர்த்தி அவர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
“அருமை அவ்வை அவர்களுக்கு, நான் இப்போது ஒரு பதவியில் இருக்கலாம். உங்களுக்கு நினைவிருக்காது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாரதி விழாவில் பங்கேற்ற மாணவன் என்று அந்த சான்றிதழை அனுப்பியிருக்கிறார்.
இவையெல்லாம் எனக்கு பெரிய பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாகும் என்று சொல்லி, உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
விழா தொடங்குகிறது.
இப்போது விருதுகள் வழங்குவதில் கூட, பாரதி மாமணி என்று திரு.இல.கணேசன் அவர்களுக்கும், பாரதி களஞ்சியம் என்று, களஞ்சியம் என்றால் பாரத மாமணி என்றால், பாரதத்தின் பற்றில் மாமணியாகவும், வாழ்க்கை முழுவதும் பாரதத்தின் வளர்ச்சியையே நினைக்கின்றவராகவும் திகழ்கின்ற வகையில், எங்களின் மாமணி என்று எப்போதும் அழைக்கப்படுவதற்கு உரிமையுடையவர்.
உ.வே.சா.விற்கு ஒரு பட்டம் உண்டு. தட்சிலார்த்த கலாநிதி என்பதாகும். தென்கலைச் செல்வர் என்று தமிழில் சொல்ல்லாம். அதுபோலதான் பாரதி களஞ்சியம் என்ற ஒரு விருதை வழங்குகிறோம் சீனி.விசுவநாதன் அவர்களுக்கு. அவர் எங்கே நடந்தாலும் பாரதி களஞ்சியம் நடக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த விருதை தருகிறோம்.
பாரதி கலைச்சுடராக திகழ்கின்ற சோபனா ரமேஷ் அவர்களையும் வாழ்த்துகிறோம் என்று சொல்லி,
பால சாண்டில்யன் இளமைக்கு இளமையும்,
வளமைக்கு வளமையும் தொழில் துறையில் நல்ல பொறுப்பில் திகழ்கிறவர் பால சாண்டில்யன் எழுத்தும் நாடறிந்தது, கருத்தும் நாடறிந்தது.
அவர் இந்த நிகழ்ச்சியை நடத்து இருக்கிறார். நண்பர் சுந்தரேசன் அவர்கள் ஸ்ரீராம் நிறுவனத்தினுடைய ஒரு பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
பொறுப்பில் இருந்தபோதும் கூட பாரதி விழா என்பதற்காக ஒரு கணம் கூட விடாமல் சுற்றிச் சுழன்று வருகின்ற ஒரு பம்பரம்போல் அவர் பணியாற்றுவதைக் கண்டு எனக்கே நான் தளர்ந்து போய்விட்டேனோ என்று நான் நினைத்தபோது அவர் தந்த எழுச்சியையையும் நன்றியோடு போற்றுகிறேன் என்று சொல்லி,
அனைவரையும் வருக என்று வரவேற்கிறேன்.
மகிழ்ச்சி.

Add a Comment