POST: 2016-03-10T11:55:36+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-10

இனிமையாக நிகழ்ச்சியை தொடங்க வேண்டும் என்பதற்காக, சென்னை முதியோர்களாக தோற்றமளித்தாலும், அவர்களின் பாடல்களில் இளமை ததும்புகிறது என்பதற்காக இளையோர் குழுவினர் சேர்ந்திசை பாடி நம்முடைய மனத்தையெல்லாம் உருக்கியிருக்கிறார்கள். அவர்கள் நல்ல காலம் வருது என்று கூறியதின்படி நல்ல காலம் வருது என்பதின் தொடக்கமாக நம்முடைய விழாவும் அமைகிறது என்று சொல்லி, உங்களையெல்லாம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

இன்று நேற்றல்ல, முப்பதாண்டுகளாக நான் வரவேற்றபடிதான் இருக்கிறேன். காரணம் வரவேற்பதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியடைகிறோம்.

காரணம் நல்லவர்கள் வருக.
நயமுடையவர்கள் வருக.
பாரதி அன்பர்கள் வருக.
இலக்கிய ஆர்வலர்கள் வருக.
தமிழ் மக்கள் திரண்டு வருக.
என்று அழைக்கின்ற வகையிலே உங்களுக்கெல்லாம் நல்வரவு கூறி, நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *