POST: 2016-03-09T12:12:21+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-9

பொதுவாகவே, கவியரசர்கள், கவிதை எழுதுவார்கள். அதுவே வாழ்க்கியினுடைய ஒரு பொழுதாக முடியும். கவிதை எழுதுவது ஒரு கடமை. ஆனால், நாட்டுக்கு உழைப்பதுதான் என்னுடைய சிந்தனை.

நாட்டு மக்களுக்கு நாட்டுப் பற்றை உருவாக்குவது மட்டுமல்ல. மொழிப்பற்றை உருவாக்குவது மட்டுமில்லை. அவர்களுக்கு இனப்பற்றும், எழுச்சிப் பற்றும், செயற்பற்றும் ஊட்ட வேண்டும் என்பதற்காக செயல் செயல் என்று சிந்தித்த ஒரு மாபெரும் கவியரசர் பாரதி.

நமக்குத் தொழில் கவிதை. அதோடு பலபேர் நின்றுவிட்டார்கள். நமக்குத் தொழில் கவிதை,
நாட்டுக்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
என்ற மூன்று இலக்கணங்களையும்
ஒன்றாகக் காட்டிய வகையில், நாம் கவிஞர்கள் பலரை அப்படி காண முடிவதில்லை.

பைரன் சட்ட மன்றத்திற்கு நின்றார் என்று ஒரு கருத்து உண்டு இங்கிலாந்து நாட்டில். பாரதியார் தேர்தலில் நிற்கவில்லையே தவிர, நாட்டை ஆளுகிற ஒரு பொறுப்புடையவரைப்போல பாட்டுத் திறத்தால் இந்த வையத்தை பாவித்திட வேண்டும் என்று ஒரு மாமன்னராகத் திகழ்ந்ததையும் நாம் எண்ணிப் பார்த்து மகிழ்கிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *