ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-8
பொதுமக்களே
பாரதி விருது வழங்குவது என்பதை ஒரு சீரிய பணியாக பாரதி கலை இலக்கியக் கழகம் நடத்துகிறது.
உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சியை சொல்வதென்றால், ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் திரு.தியாகராஜன் அவர்கள் ஒரு மாபெரும் விருதை பாரதியாரின் பெயரில் வழங்க வேண்டும் என்ற பேரவாவில் இருக்கிறார்.
அவருக்கு தொழில் நிறுவனங்களை நடத்துகிறவர்களெல்லாம் அறப்பணிகளில் ஆரவாரமில்லாமல் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். அந்த வகையிலேயே இன்று வழங்குகின்ற விருதும், பாராட்டும்கூட எளியவகையில்தான் என்றாலும் கூட பாரதி பணிக்காக தன்னை ஆட்படுத்திக் கொள்கிறவர்களுக்கு ஸ்ரீராம் என்ற நேரத்திலும் கைகொடுக்கும் துணை நிற்கும் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

Add a Comment