ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-6
இந்த மூன்று பேருக்கும் விருது வழங்குவதை போற்றி இந்த நாளில் நம்முடைய நெஞ்சத்தை நெகிழவைக்கிற பேச்சாளர் என்று சொன்னால், இன்று நாடு முழுவதும் அறிந்த நாகர்கோவில் பேராசிரியர் ராஜாராமைச் சொல்ல வேண்டும்.
அவர் எனக்கு பல்லாண்டுகளாகத் தெரிந்தவர். கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். பட்டி மன்றங்களிலும், கருத்தரங்கங்களிலும், அவருடைய மனம் நாட்டுப் பற்றில் பதிந்த்து என்பதால், அவர் பேசும்போது நம்முடைய கண்களில் நீர் துளிர்ப்பதைப்போல நாட்டு உணர்வை எடுத்துப் பேசுகின்ற பேராசிரியர் ராஜாராம் அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.

Add a Comment