சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-8
பல புதிய சிந்தனைகள் ஒவ்வொரு பாடத்திலும் பதிந்து கிடக்கின்றன. ஆனா, ஆவன்னா, (பாடம் 68) என்பதையும் முறைப்பட பயன்படுத்த வேண்டியதையும் விளக்குகிறார்.
எழுவாய் பற்றிய புதிய கருத்துக்களையும் (பாடம் 31) பதிவு செய்கிறார். தோன்றா எழுவாய் போலத் தோன்றாப் பயனிலையும் உண்டு என்று வரைவது சிந்திக்கத் தூண்டும் குறிப்பாக உள்ளது.
கோடலி – கோடரி (பாடம் 72) என்பதில் எச் சொல் சரி என்பதை விளக்கும் பாடம் ஆய்வறிஞர்களும் அறியவேண்டியப் பகுதி இப்படி இந்நூலில் உள்ள பாடங்கள் நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுல பன்மாண் செறிவைக் காட்டுகின்றன.
ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆழமான அவரது புலமை, இவ்விலக்கணத்தை ஆர்வத்தோடு தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது.

Add a Comment