POST: 2016-01-12T14:54:39+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !
அறிஞர் ஔவை நடராசன்-5

தமிழ் மொழியின் இலக்கணப் பயில்வு மற்றும் பயிற்றுவிப்பு மரபினை செழுமைபடுத்த வேண்டிய தேவை இன்றைக்குப் பெரிதும் வேண்டற்பாலது.

பயில்வு மற்றும் பயிற்றுவிப்பு மரபு என்பது ஆசிரியர், மாணவர் என்ற முறையில் இருத்தல் தேவையான ஒன்று.

மாணவர்தம் அறிவை, குறிப்பாக இலக்கண அறிவைச் செழுமைபடுத்த முனைவதில் குறைபாடு உடையவர்களாகவே இந்நாளைய ஆசிரியரும் புலவரும் வாழ்கின்றனர்.

இவற்றையெல்லாம் கடந்து இலக்கணத்தைக் கற்பிக்கும் முறையில் பாடத்திட்டத்திற்கு முதன்மை இடமுண்டு.

தமிழ்மொழியின் இலக்கணத்தைக் கற்பிக்க எழுதப்பெற்ற பாடநூல்கள் பல்வகைப்பட்டன. தம்முள் மாறுபட்டனவும் உண்டு. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்ட இலக்கணப் பாடங்களுக்கும் இன்றைய பாடங்களுக்குமான வேறுபாட்டை நாம் அறிய முற்பட வேண்டும்.

தமிழகச் சூழல் இப்படி இருக்க, அயலகத் தமிழ்க் கல்வி வெகுவாக நெறிப்படவே அ9மகிறது எனலாம். புலம்பெயர்ந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களுள் அறிஞர்கள் தமிழ்மொழியைக் கற்க நெறியான பாடநூல்களை உருவாக்க முயல்கின்றனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *