POST: 2016-01-05T11:43:22+05:30

எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் -1957-1962

தமிழ்த் தோன்றல்

சீரிய கூரிய தீஞ்சொல் என்பது கம்பன் வழங்கும் அழகிய தொடர்களுள் ஒன்று. இதனை அவன் வழங்கிய இடமும் காலமும் வேறு. ஆயினும் இதன் பொருளும் கருத்தும் அவ்விடம் காலம் முதலிய இயல்பு நோக்காது – உண்மையும் அது நிறைந்த உரையும் இரண்டும் செறிந்த செயலும் ஒருங்கும் நிகழும் இடங்கட்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

பல அறிஞர்கள் பார் சீர்மையும் உரையும் செயலும் ஒளிருங்கால் சீர்மையும் கூர்மையும் இனிமையும் நிறைந்த சொற்கள் பிறந்து நல்ல பயனை விளைவிக்கின்றன. அவருள் அன்பர் திரு.அண்ணாதுரையும் ஒருவர். அவர்பால் சீரிய கூரிய தீஞ்சொற்கள் பெருஞ் செல்வமாக நிலவுகின்றன.

செல்வத்துப்பயன் ஈதல் என்பர். திரு.அண்ணாதுரையும் பெருஞ்செல்வமாகிய இச்சொற்களை வரையாது நிரம்ப வழங்குகின்றனர்.

தமிழினஞ் செல்வத் தோன்றல்கள் அவற்றை விரைந்து
மனங்கொள்ள ஏற்றுத் தொழில் கேட்கும் தமிழ் நலம் எய்துகின்றனர். இதனைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்து வரும் என்போன்றோர் உள்ளத்தில், எதிர்காலத் தமிழகம் இனிய காட்சி வழங்கக் கண்டு இன்புறுகின்றனர்.

ஒரு நல்ல சுயமரியாதைக்காரராகக் காட்சி வழங்கிய, தூய சுயமரியாதை வீரராய், மான மாண்புடைய கட்டிளந் தமிழ்த் தோன்றலாய் விளங்குகின்றார் திரு.அண்ணாதுரை.

-ஔவை சு.துரைசாமி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *