POST: 2015-12-31T21:19:52+05:30

முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(7)

9)நிருபர் : அய்யா நீங்கள் சொல்லும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் தமிழ் மொழிதான் வணிக மொழியாக இருந்தது இல்லையா? ஏனென்றால், நான் படித்தபோது, டெபிட், கிரிடிட் போன்றவற்றிற்கெல்லாம்கூட தனித்தனி குறியீடாக ரொம்ப ஒரு செழுமையான காலகட்டம் இருந்தது இல்லையா? அப்படியென்றால், வணிக மொழி தமிழ் மொழியாக இருந்தததற்கு ஏதாவது அறிகுறிகள் உள்ளதா ?

திரு.அவ்வை நடராசன்

யவனர்களும், மகத நாட்டு மக்களும், அவந்திக் கொல்லரும், மகதச் தச்சரும், யவனக் கொல்லரும் என்றெல்லாம் அயல்நாட்டுக்காரர்கள் புலம் பெயர் மாக்கள் காவிரிப்பூம்பட்டிணத்தின் கடற்கரை ஓரத்தில் வணிகம் நடத்தினார்கள் என்று நமக்கு இலக்கியம்தனில் குறிப்புகள் இருக்கின்றன. அப்போது அவர்கள் தமிழில் பேசி இருப்பார்கள். வந்த யவனர்கள் அதை எப்படி விளங்கிக் கொண்டார்கள் என்று சொல்ல முடியாது.

நீங்கள் நினைப்பதுபோல காலம் பின்னாடி போகப் போக செழுமையாக இருந்தது என்பதைவிட காலம் இப்போது ஒவ்வொரு மணிநேரமும் புதியதாக பரவியிருக்கின்றன.

இதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர பழமையினுடைய செழுமையினை நினைத்துப்பார்த்து ஒரு காலத்தில் வணிக மொழியாக தமிழ் மொழி இருந்தது என்றால், அப்போது வேறு மொழிகள் இல்லை என்று பொருள். இப்போது வேறு மொழிகள் இல்லை என்று சொல்ல முடியாது.

ஆங்காங்கிலேயே எத்தனை மொழிகள் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். எனவே, பல்வேறு மொழிகளைத் தேடுகிற மக்கள் பரவலாக சூழ்ந்திருக்கிறபோது, ஒரு தனி மொழி சிறப்புடையதாக, வணிக மொழியாக, வாழ்க்கை மொழியாக இருந்த காலம் என்பது பழைய காலம். அப்போது மக்கள் குறைவாக இருந்த காலம். வேற்று மொழிகள் பரவாமல் இருந்த காலம்.

10)நிருபர் : எங்கள் வீட்டில், ரொம்ப பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். என் பசங்கங்களுக்கு இட்லி, தோசை இருந்தால் போதும் வேறு உணவே வேண்டாம். ரொம்ப பிடித்த சாப்பாடு அது மட்டும்தான்.

திரு.அவ்வை நடராசன்

உடை ?

11)நிருபர் : அது கொஞ்சம் கஷ்டம் அய்யா. அதாவது கோயிலுக்குப் போகனும் அப்படியென்றால் மட்டும் இந்திய உடை. அந்த இந்திய உடை, பொட்டு வைத்துக்கொள்வது, வளையல் போட்டுக்கொள்வது அந்த மாதிரியெல்லாம் இருப்பார்கள். ஆனால், பெரும்பாலும் இங்கே இங்குள்ள நாகரிக உடைகள்தான் போட்டுக்கொள்வார்கள்.

திரு.அவ்வை நடராசன்

பார்த்தீர்களா? உடை வந்து விட்டது பார்த்தீர்களா ? அதாவது, பெரும்பாலும் பள்ளிக்குப் போகிறபோது, பள்ளியியே கிடைக்கிற மதிய உணவு இருக்கிறது பாருங்கள் அது ஊர் உணவுதான் கிடைக்கும்.

12)நிருபர் : கண்டிப்பாக. அதற்காகவே, மதிய உணவு கொடுத்து அனுப்பிவிடுகிறோம் அய்யா.

திரு.அவ்வை நடராசன்

நீங்கள் சொல்வது ஒரு பெரிய சிறப்பான கருத்து, இந்த பிள்ளைகள் வளர வளர மெல்ல, மெல்ல உணவு, உடை, உணர்ச்சி, கருத்து, சிந்தனை இவைகளில் அந்த நாட்டுக்கு உரியவர்களாக மாறிவிடுவார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *