முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(6)
நிருபர் : என் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பதையே பெற்றோர்கள் பெருமையா சொல்வது மாதிரி நான் நிறைய பார்த்திருக்கிறேன். So, அந்த மாதிரி பெற்றோர்களுக்கு உங்களுடைய செய்தி என்னவாக இருக்கும்?
திரு.அவ்வை நடராசன்
அது ரொம்ப தவறும்மா. ஆனால், ஊரோடு ஒத்துவாழ் என்று ஒரு பழக்கம் இருக்கிறது.
நிருபர் : இருந்தாலும் நம்முடைய தனித்தன்மையை விட்டுக்கொடுக்கக்கூடாது
திரு.அவ்வை நடராசன்
இவர்களுக்கு என்ன நினைப்பு என்றால், உடன் இருப்பவர்களைவிட்டு தனியாக பிரிந்து போய்விடக்கூடாது, தனியாக விலகிப்போய்விடக்கூடாது. என்னுடைய பணியாளர் இருந்தார்.அவருடைய மகனைக் கொண்டுபோய் அவர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார். அவரை உடனே நான் கேட்டேன். “நீ ஏன் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாய் என்று”,
“இல்லை அய்யா, என் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும், அடுத்த வீட்டுப் பிள்ளைகளும் அங்கே படிக்கும்போது நான் என் பிள்ளையையும் சேர்த்தால் என்ன குறை” என்று அவர் சொன்னார்.
உங்களுக்குச் சொல்லட்டுமா செய்தி.
தமிழிலேயே அந்தக் குழந்தை படித்தால் புத்தகத்திற்கு விலையில்லை. உடைக்கு விலையில்லை. அவர்கள் அணிந்துக் கொள்ளுகிற பொருள்கள் எதற்கும் விலையில்லை. எல்லாமே விலையில்லாமல் கொடுத்தபோதுகூட அவர்கள் அந்தக் கல்வியை விரும்பாமல், ஆங்கிலக் கல்வியில் போய் இருபதாயிரம், முப்பதாயிரம் என்று கொடுத்து படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தமிழ் மீது வெறுப்பு வந்தது என்றல்ல பொருள். வீசுகிற காற்று அப்படி என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஊரோடு ஒத்துப்போவது, உலகோடு இணைந்து போவது என்று எண்ணிப் பார்க்கிறபோது, வாழ்கிற நாட்டின் சூழ்நிலைக்கு அவர்கள் எப்படியாவது வயப்பட்டு விடுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேனே தவிர, அவர்களையும் குறை சொல்ல முடியவில்லை.

Add a Comment