POST: 2015-12-30T21:19:41+05:30

முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(5)

நிருபர் : நீங்கள் சொல்வது உண்மைதான்

திரு.அவ்வை நடராசன்

ஆனாலும், இந்த முயற்சியை விடாதீர்கள்.

நிருபர் : எனவே, எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் பேசின அளவு எங்களுக்கு தெரிந்த அளவு அவர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொடுக்க முடிவது இல்லை. இப்ப அவங்க பாதி சீன
மொழியும், சீன மொழியும் முழுசா தெரியல, தமிழ் மொழியும் முழுசா தெரியல. ஒருமாதிரி ரெண்டுங்கெட்டான் நிலையில் உள்ளார்கள்.

திரு.அவ்வை நடராசன்

அந்த அம்மா சொன்னதில் எனக்கு பெரிய ஒரு உணர்வைத் தருகிறது. ஆனால், பாருங்கள், காலப்போக்கில், எந்த மொழி பேசினால் அவர்களுக்கு அலுவல் கிடைக்கும், உயர்கல்வி கிடைக்கும், வாய்ப்புகள் வளரும் என்று நினைக்கிறார்களோ அந்த மொழிதான் அவர்கள் மனத்தில் போய் பதிந்துவிடும்.

இதைத்தவிர, அதைப்பற்றி நாம் ரொம்பவும் வருந்த வேண்டியதில்லை. அவர்கள் மனத்தில் அந்தப் பழக்கம்
இருந்தால் போதும். எங்கே போனாலும் கூட எவ்வளவுதான் மாறினாலும்கூட சிலவற்றை நாம் மாற்றிக்கொள்ள முடியாது. நம்முடைய பிள்ளைகளுக்கு நீங்கள் இந்த உணவு கூட பாருங்கள் மாற்ற முடியாது என்று நான் நினைத்தேன். காலப்போக்கில் இப்போது பிள்ளைகள் மாறிவிட்டார்களே.

இட்லி சாப்பிடுவது இல்லை எனக்கு பீட்சாதான் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆக உணவில்கூட குழந்தைகள் மாறி இருக்கிறார்கள் என்றால், பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் மாறும்.

புதிய உலகமும், புதிய மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறபோது, இப்படிப்பட்ட புதுமை உணர்வுகள் எந்த உலகத்தை உருவாக்கப்போகிறது என்பதை காலம் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *