POST: 2015-12-13T11:09:02+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-8

எனவே, இந்த விழாவை எப்படி நடத்துவது என்கிற அழகு காட்டுகின்ற வகையில் பெருமிதமாக ஸ்ரீராம் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றது.

எத்தனையோ நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடந்தாலும், மனம் கனிந்து மகிழ்ச்சி தருகின்ற நிகழ்ச்சிகள் என்று சிலவாகத்தான் இருக்க முடியும். அந்த நிகழ்ச்சிகளில் ஸ்ரீராம் நிறுவனம் நடத்தும் இந்த பாரதியார் விழா அத்தகைய புகழ் வாய்ந்தது.

இந்த விழாவின் பெருமைக்காக எதிரே அமர்ந்திருக்கிற பெருமக்களைக் காணும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. பாரதி நாவலர்கள், இசைக்காவலர்கள், இசைப் பெரும்புலவர்கள், தொழில் மேதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக கலை, இசை எங்கிருந்தாலும், வந்து அமர்கின்ற நம்முடைய நீதியரசர் பக்தவச்சலம் என்று பார்க்கின்றபோது உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

இந்த விழாவிற்கு செலவேற்பதுதான் கடினமே தவிர வரவேற்பது சுலபம் என்று நான் நினைக்கிறேன்.

எனவே, உங்களை வருக வருக என மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். வந்திருக்கிற பெருமக்களுக்கெல்லாம், பாரதியாரும், மகாத்மாவும் என்ற நூல் பரிசாக தரப்படவிருக்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *