POST: 2015-12-10T14:21:18+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா
நாள் 05.02.2006
வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-3

பெருமக்களே

இன்றைய விழாவிற்குவழகை தந்துள்ள தலைவரைப் பற்றி நான் சொல்ல வேண்டும்.

சேசசாயி அவர்கள் தன் தந்தையின் புகழால், தாயின் புகழால் தனக்கென அமைந்த தனிப் புகழால் மூன்று மடங்கு புகழ் வாய்ந்தவர் சேச சாயி அவர்கள்.

அவருடைய அன்னையார் எழுத்துலகத்திற்கு நன்றாகத் தெரிந்த திருமதி.வசுமதி ராமசாமி அவர்கள்.வசுமதி ராமசாமி அவர்கள் எழுதியுள்ள கதைகளை, கட்டுரைகளை ஏராளம்பேர் படித்திருப்பார்கள்.

ஒருவர் படித்து, வசுமதி அவர்கள் நீங்கள் தொடர்ந்து வேதியல் கடிதங்கள் என்பதை எழுதினால் இந்த நாட்டு இளம் பெண்களும், தாய்மார்களும் பயன்பெறுவார்கள் என்பதை சொன்னவர் ராஜாஜி.
அப்படிப்பட்ட புகழ் வாய்ந்தவர் வசுமதி ராமசாமி

அவர்கள்.தந்தை வழக்கறிஞர் துறையில் மாபெரும் புகழ் வாய்ந்தவர். இப்படிப்பட்ட தந்தை தாயின் புகழைச் சுமந்துக்கொண்டு நண்பர் சேசசாயி அவர்கள் தன்னுடைய நிர்வாகத் திறமையால், தன்னுடைய ஆற்றலினால் இன்று மாபெரும் நிறுவனமான அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக திகழ்கிறார் என்பது இந்திய நாட்டின் இளைஞர்களின் சாதனையாளர் என்பது நண்பர் சேசசாயி அவர்களுக்கு பொருந்தும்.

அவர் இந்த விழாவிற்கு வந்திருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *