முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே!-2
பழந்தமிழகத்தே ஊறிய பண்பாட்டோடு வடமொழிப் பண்பாடும் கலந்து பொதுமையான ஒரு பண்பாட்டுச் செழுமையை ஊட்டுகின்றது.
ஒரு பண்பாட்டோடும் நாகரீகத்தோடும் தொடர்பு கொள்வதால், ஒரு வகையான வடிவ நிறைவைக் காணமுடியும்.
ஐரோப்பிய நாட்டில் விளைந்த மறுமலர்ச்சி இதற்கான சான்று என்பர் அறிஞர்.
வடநாட்டோடு கொண்ட தொடர்பு குறிப்பாகச் சமணம், பெளத்தம் போன்ற சமயங்களோடு கொண்ட சார்பு, வணிகத்தின் வழியாக மேலை நாடுகளோடு கொண்ட உறவு, குடியேற்றத்தால் கீழை நாடுகளோடு அமைந்த இணக்கம் ஆகியவை சங்க இலக்கியத்தில் காணும் புதுமைக்கு ஒரு வழி வகுத்திருக்கின்றன.
சில நிலைகளில் நாம் சுட்டும் இந்த மறுமலர்ச்சி சீற்றத்துக்கு உள்ளாகிச் சிலருக்குச் சினம் ஊட்டலாம் என்று அறிஞர் தெ.பொ.மீ எழுதினார். –

Add a Comment