சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-16
– பீட்டர் குயென்னெல்
அவருடைய துன்பியல் நாடகங்களிலும் இன்பியல் நாடகங்களிலும் மனித மாண்பு உட்பொதிந்துள்ளது, அவர் உயர்த்திக் காட்டக் கூடிய கதைமாந்தர்கள் பெரும்பாலும் அவர் நாடகத்தை இயற்றத் தொடங்கிய கட்டத்தில் வசைபாடுவதற்காகவோ, கிண்டலடிப்பதற்காகவோ உருவாக்குவதாக எண்ணிப் படைக்கப்பட்டவர்கள்.
அவருடைய நாடகங்களில் மூல வடிவமைப்பின் கட்டுக்களை அறுத்துக் கொண்டு ஓடுகின்ற கதைமாந்தர்களே நிறைந்துள்ளனர்.
தீங்கிழைக்கக் கூடிய கொடியவனாக நுழைகின்ற சைலக் அவலச்சுவையின் கண்ணியத்தை வரித்துக் கொள்கிறான். நகைச்சுவை நடிகனான ஃபால்ஸ்டாப் முகாமை மாந்தர்களை மெல்ல, மெல்ல பின்னுக்குத் தள்ளிவிட்டு அரங்கின் மையத்தை ஆட்கொள்கிறான்.
கிறிஸ்டபர் மார்லோவைப் போல சேக்ஸ்பியர் புரட்சிக் கவிஞரல்ல. அவர் உறுதியான புதுமை மறுப்பாளராகவும், ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விலங்கு, அல்லது பயிரினத்திற்கும் எல்லையற்ற அமைப்புமுறையில் ஓரிடம் முன்கூட்டியே வகுக்கப்பட்டுள்ளது என்கிற எலிசெபெத் காலத்திய படித்தரக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டவர்.
பதினாறாம் நூற்றாண்டைய அறிவியல் மேதைகளுடைய அரிய கண்டுபிடிப்புகளின் பால் சற்றும் அவர் அக்கறை கொண்டதில்லை.
கோபெர்னிகசின் வானியல் கோட்பாடுகளையும் விண்கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் பெயரிட்டு அவற்றின் இயக்கப் போக்குகளை வரையறுத்த அறிவியல்முறையைத் தனது நாடகங்களில் கிண்டலடித்தவர்.

Add a Comment