25TH GRADUATION DAY SPEECH
on 05.07.2015
CHIEF GUEST’S SPEECH BY
THIRU.AVVAI NATARAJAN-7
Valliammal Women college,Annanagar-4
நேற்று காலை தான் என்னுடைய உறவுப் பெண் சொன்னாள், நான் நார்வேக்குப் போகிறேன் என்று சொன்னாள்.
நார்வே போவதற்கும், சுவஸ்லர்லாந்து போவதற்கும், டென்மார்க் போவதற்கும், விப்ரோவிற்குப் போவதற்கும், சிட்கோவிற்குப் போவதற்கும், இல்லை அடக்கமாக வள்ளியம்மாள் போன்ற ஒரு கல்லூரியில் பேராசிரியராக போவதற்கும், ஏன் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் போவதற்கும் வாழ்க்கையை தொடங்கி இருக்கிற நீங்கள் எப்படியும் குறைந்தது, ஒரு ஐந்து ஆண்டுகளாவது நீங்கள் படித்ததற்கு நீங்கள் வேலை பார்க்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை, காரணம், படித்துவிட்டு வீட்டில் போய் உட்கார்ந்து இருப்பது தவறு
.
The education, what we have learned in so much of perseverance, should be given to the society, and the society should be benefited by the knowledge of what we have gained.
அதனால்நான் உங்கள் தாய் தந்தையர் வந்து இருந்தால் சொல்லுவேன், எந்த பிள்ளயும் ஐந்து ஆண்டுகள் வேலை பார்க்கும் வரையில் திருமண பேச்சை பேசக்கூடாது.
இப்படி சொல்லலாமா சார் என்று கேட்டால், இந்த ஆண் பிள்ளைகள் எல்லாம் அலையட்டும் பெண்கள் கிடைக்க வில்லை என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

Add a Comment