POST: 2015-10-01T13:06:45+05:30

ஓர் ஆலமரம் சாய்ந்தது!

பொறியாளர் டத்தோ சாந்தகுமார் ஈழ மரபைச் சார்ந்த மலேசியா திருநாட்டின் குடிமகனாக பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தவர். ஓங்கி உயர்ந்த அடுக்கு மாடிகளை கட்டுகிற திறமைகளோடு தொழில்துறையில் உயர்ந்த சிந்தனைகளை தன் கண்களில் மிதக்க விட்டவர்.

வாய் திறந்தால் ஒரு நாட்டுக்கு வேண்டிய புதிய மேம்பாடுகளைப் பற்றி ஓய்வில்லாத திட்டங்களை வரைந்து கொண்டிருந்தவர். தன் கனவுப்படியே கொழும்பு மாநகரம் சென்று தொழில் உயர்வுச் சிந்தனைகளை பேசிக்கொண்டே இருந்தபடி அண்மையில் 22.9.2015 காலமானார்.

எளிமை, திறமை, செயல் மேம்பாடு, சிந்தனையில் பண்பாடு இவைகளை வளர்த்துக் கொண்டிருந்தவருக்கு எந்தத் துறையிலும் நண்பர்கள் பலவுண்டு.

கொள்ளைக் செம்மல் திரு.நல்லகுமார் அவர்களின் அறிமுகத்தோடு பத்தாண்டுகளுக்கு மேல் டத்தோ உடன் பழகியவன்.

அன்னோனை இழந்த இவ்வுலகம்
என்னாவது கொல்? அளியது தானே!
என்ற புறநானூற்றுப் பாடல்(217) இவரை நினைவூட்டுகிறது.

டத்தோ சாந்தகுமாரை இழந்து சஞ்சலக்கடலில் நீந்தும் உறவு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *