வாய்ப்புக்கள் குறைந்த குடும்பத்தில் பிறந்து வாயுரை ஒன்றாலேயே வாழ்ந்து அரசியலில் தலைமைப் பெற்ற அண்ணா தன் வாழ்நாள் முழுவதும் மேலும் தன்னை வளர்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்திலேயே இருந்தார்.
நேருவை நினைத்துப் பார்த்து, அவர் கட்டி முடித்த கோபுரம், நானோ கொட்டிக் குவித்த செங்கல் என்று குறிப்பிட்டார்.
இனிமேல் தான் மண்ணையும் கல்லையும் குழைத்து மாளிகை கட்ட வேண்டும் என்ற முயற்சியில் தான் 1965 முதல் பணிகள் நடைபெறுகின்றன.
அண்ணாவின் பிறந்த நன்னாள் என்பதை நினைவூட்டிக் கொண்டு ஆக்கப் பணிகளுக்கு ஊக்கம் பெறுவோம்.

Add a Comment