POST: 2015-09-14T13:28:37+05:30

நீதியரசர் கைலாசம் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் குடும்பத்தாரால் நடத்தப்பெற்றது.
அதிர்ந்து பேசாத அடக்கமானவர். அவர் குடும்பம் காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தது.

அவர் நீதிபதியாக இருந்தபோது திருநெல்வேலி நகராட்சியை காங்கிரசு ஆளும் கட்சி கலைத்துவிட்டது. இது வழக்குக்கு வந்தபோது கலைத்தது தவறு என்று எதிர்த்து் பேசினார் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், கலைத்தது முற்றிலும் சரியென வாதிட்டார் வழக்கறிஞர் மோகன் குமாரமங்கலம்.

அறத்தின் வடிவமான நீதிபதி கைலாசம் வழங்கிய தீர்ப்பு கலைத்தது பெரிய தவறு என்று தீர்ப்புரை கூறினார் இத்தீர்ப்பு அந்நாளில் பேசப்பட்ட அறத்தின் உரையாகும்.

நீதியரசரின் துணைவியார் கவியரசியார் திருமதி.சௌந்தரா கைலாசம் அவர்களை கண்டு பேசுவதற்காக எந்தக் கட்சியை சார்ந்தவர்கள் என்று இல்லாமல், தமிழறிஞர்கள் மொய்த்துக் கிடந்தார்கள். அம்மா அவர்களின் விருந்தோம்பல் ஒப்பிலாதது. எந்த நிலையிலும் நீதியரசர் இடையிட்டு பேசியதேயில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *