POST: 2015-08-10T09:29:14+05:30

இந்தியப் பண்பாடு-32

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

தேசிங்கு மன்னனுடைய நண்பன் மகமத்கான். இந்த மகமத்கானுக்குத் திருமணம் நடந்துகொண்டிருக்கும்போது தேசிங்கு மன்னன் போர்க்களத்தில் இருக்கிறான் என்று ஓலை வருகிறது. உடனே திருமண மாலையைக் கீழே எறிந்துவிட்டுப் போருக்காகப் போனான். அப்படிப்பட்ட நட்பு உணர்வு இந்த நாட்டில் இரு சமயத்தாரிடையே இருந்தது.

எனவே நம்முடைய ஒருமைப்பாட்டு உணர்ச்சி என்பது மறைந்து ஓடுகிறாறு போல் இருக்கின்றது. மேலும் மேலும் அதை வளப்படுத்துவதும் நலப்படுத்துவதும் இன்றைய காலத்திற்குரிய வகையில் சிலவற்றை மாற்றிக்கொள்வதென்றால் மாற்றிக்கொள்வதும் நமக்கு மாபெரும் கடமையாக அமைகிறது என்று கூறி இந்தியப் பண்பாட்டை விரிவாக நாம் எண்ணிப்பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகச் சிறந்த கலைக் கருவூலங்களை, காவியங்களை வெளியிட்ட பெருமை பாரதிய வித்யா பவனைச் சாரும்.

பெருந்தகை கே.எம். முன்சி அவர்கள், யார் நூல் எழுதவில்லையென்றாலும் நானே எழுதுகிறேன் என்று பல அரும்பணிகளைத் தொடங்கினார். அவ்வாறு அமைந்த களஞ்சியமாக India`s Heritage என ஒரு தொகுப்பு மடலங்களை வெளியிட்டுக் காட்டினார்கள்.

உன்னதப் பணியை, பண்பாட்டு நலன்களை ஓம்பும் உயரிய பணியைத் தொடர்ந்து செய்கின்ற உங்கள் நிறுவனம் வாழ்க!
உங்கள் பணிகள் வெல்க!

என்று கூறி அமர்கிறேன்.
வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *