POST: 2015-07-30T20:51:55+05:30

இந்தியப் பண்பாடு-21

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

போரிலும் காதலிலும் எதுவும் சரியென்பது தானே ஆங்கில வழக்கம். ஆனால் போரிலும் காதலிலும் கூட அறப்பாங்கு மிளிர வேண்டும். இல்லறம் போல இன்னொரு அறம் போர் அறம்.

எதிரே நிற்கின்றவன் தன்னுடைய வாள், வில் முதலிய எல்லாக் கருவிகளையும் கீழே போட்டுவிட்டு நிற்கின்ற போது, பரவாயில்லை, ‘‘இன்று போய் நாளைப் போருக்கு வா’’ என்ற பாங்கு என்பது ஒரு பண்பாட்டின் வெளியீடாகத்தானே தெரிகிறது.

எனவே போரிலும் வாழ்க்கையிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்னும் மரபை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலக்கியங்கள் நமக்கு வலியுறுத்தியுள்ளன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *