இந்தியப் பண்பாடு-19
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
…
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
வாழ்க்கையில் ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழும் வாழ்க்கைதான் வாழ்க்கை என்று கருதுகிறோம். எனக்குத் தெரிந்து வேறு எந்த நாட்டிலும் ஒருவன் ஒருத்தி என்பதை மிகப் பெரிதாக வலியுறுத்தவில்லை. நம்முடைய நாட்டிலே கூடப் பலரை மணந்து கொள்கிற வழக்கமுண்டு. பலரை மணந்துகொள்ளும் வாழ்க்கை இருந்தாலும் கூட, ஒருவன் ஒருத்தி என்று வாழ்கிற வாழ்க்கை என்பதுதான் உயிரும் உடம்பும் போல இணைந்த வாழ்க்கை. திருமணத்தின்போது எழுதிக்கொடுக்கின்ற எந்த மொழியினுடைய ஆவணத்திலும் இதுதானே இருக்கின்றது. ஒரு உடம்பில் எத்தனை உயிர் இருக்கும், ஓர் உயிர்தானே! சூழலுக்கேற்ப மூன்று மனைவிகள், நான்கு மனைவிகள் என்று இருந்தாலும் கூடத் திருமண வாழ்க்கையை வலியுறுத்திக் காட்டி ஒருவன் ஒருத்தி என்கிற போக்கைப் பெரிதும் பாராட்டுகின்ற மரபு என்பது இந்திய நாடு முழுவதிலும் பண்பாடாகப் பரிமளிக்கிறது எனலாம்

Add a Comment