இந்தியப் பண்பாடு-18
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
…
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
வினாக் கேட்பது என்பது இப்பொழுது வளர்ந்துள்ள நல்ல நாகரிகம். ஆனால், தந்தை தாய் உறவினர்கள் இவர்களோடு உடனிருந்தாலும் அறிவாற்றல் உடையவருக்கே பெருமிதம் உண்டு என்றாலும், தாயையும் தந்தையையும் பணிந்து போற்றுவது என்ற கடமையை இப்போது பல நாடுகளில் நம்மால் காண முடிவதில்லை. அது பெரிய குற்றமா என்று கூடக் கேட்பார்கள். தளர்ந்து முதிர்ந்தவர்கள், யாருக்கும் பயன்படாத நிலையில் வாழ்க்கையில் இப்போது மூத்து இருக்கிறார்கள் என்னும்போது, நமது நாட்டில் நெடுங்காலமாக இந்த முதுமையை நினைவூட்டியிருக்கிறார்கள்.
தந்தையினுடைய பெயரைப் பெயரனுக்கு வைக்கிறோம். தாயினுடைய பெயரை மகளுடைய மகளுக்கு வைக்கிறோம். இந்தத் தாயும் தந்தையும் ஐம்பது அறுபது ஆண்டுகள் முதிர்ந்த பிறகு யாருக்கும் பயன்படுவதில்லை. அப்படிப் பயன்படுவதில்லை என்றாலும் எந்தப்பயனையும் கருதாது அவர்களைப் போற்றுகிற வழக்கம் என்பது பெற்றோர் வழிபாடு என்ற வகையில் நாம் இங்கே எண்ணிப் பார்க்க முடிகிறது. இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், தந்தைக்குக் கடமை இருக்கிறது. மகனுக்கும் கடமை இருக்கிறது. ஆனால், மகனுடைய கடமை தந்தைக்குப் புகழ் வளர்த்துக் காட்ட வேண்டும் என்ற அளவிலே நின்றார்களே தவிர மகன் முதிர்ந்த நிலையில் தந்தையைப் போற்றவேண்டுமென்று குறிப்பிடவில்லை; என்றாலும் கூடத்
தந்தை மகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி என்று சொன்ன பிறகு தாய்தந்தையரைப் போற்றும் கடமை மூத்தவர்களைப் போற்றுவது என்ற வழக்கத்தினை நாம் வழிவழியாகக் கொண்டிருக்கிறோம்.

Add a Comment