POST: 2015-07-22T09:29:19+05:30

இந்தியப் பண்பாடு-16

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

திருமணம் செய்துகொள்கிற ஒரு பெண்ணைப்பற்றிப் பேசும்போது நாம் உங்கள் பெண் எங்கே வாழ்க்கைப்படப் போகிறாள் என்று கேட்போம். அப்ப்பொழுது என்ன பொருள்? பெண் நம் வீட்டில் இதுவரையில் இருந்தாள், திருமணம் செய்துகொண்ட பிறகுதான் வாழ்க்கைப் படுகின்றாள்.எனவே வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன்படுவது, தன் வீட்டை விட்டுவிட்டு, இன்னொரு வீட்டைத் தன் வீடாக நினைப்பது, தன்னைப் பிறருக்குத் தந்து பிறருக்கென மாற்றிக் கொள்வது என்று பொருள்படுவதாகத் தெரிகிறது. பண்பாடு என்று பார்த்தால் இப்படித்தான் வாழ்வு அமைய வேண்டும் போலத் தெரிகிறது. பிறருக்கு வாழ்வது என்று சொன்னால் – பிறருக்கு வாழ்வது என்னும் பழக்கம் விலங்குகளிடம் இல்லை. பிறருக்குப் பயன்படுவது என்ற எண்ணத்தைத் தான் பண்பாடு என்று நெடுங்காலமாகச் சொல்லி மகிழ்கிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *