POST: 2015-07-18T14:38:44+05:30

இந்தியப் பண்பாடு-14

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

நாம் வாழ்வு என்று எதை நினைக்கிறோம்?

மேலைநாடுகளில் உணவு, உடை, உறையுள் இந்த வசதிகளோடு வாழ்வதைத்தான் வாழ்வு என்று நினைக்கிறார்கள்.

நான் உபநிடதத்தின் ஒரு தொடரை தமிழில் மாற்றிச் சொல்வதென்றால்
வாழ்வு என்பது உணவில் இல்லை,
வாழ்வு என்பது உடையில் இல்லை,
வாழ்வு என்பது உறையுளில் இல்லை.
பின் எங்கே இருக்கிறது?
வாழ்வு மனத்தில் இருக்கிறது என்பதைத் தமிழில் சொல் என்றால், எளிதாக விளக்கிவிடலாம்.
வாழ்வு என்று எதைச் சொல்கிறோம்.
நம்முடைய வீட்டில் இரண்டு குதிரைகள் வாழ்கின்றன என்று சொல்கிறோமா? சொல்வதில்லை. இரண்டு குதிரைகள் இருக்கின்றன என்போம்.
கோயிலில் யானை இருக்கின்றது, வாழ்கின்றது என்று சொல்வதில்லை.
எனவே வாழ்க்கை என்பது உடல் அசைவதில் மட்டுமே இல்லை. .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *