இந்தியப் பண்பாடு-12
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
படையிருந்தால்தான் வேந்தனுக்குப் பெருமை, படைகளுக்குச் செலவிடுவதுதான் பெருந்தொகையாக இன்றும் உள்ளது. படைவீரர்கள் சுற்றியிருப்பது தான் வேந்தனுக்கும் அழகு.
இந்தியப் பண்பாடு என்று எண்ணிப்பார்த்தால், ‘‘ வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோல் அதுவும் கோடாது எனின்’’ என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. வேறு எங்காவது இவ்வாறு உண்டா என்று எண்ணிப் பாருங்கள்!
வேல்தானே வெற்றி தரும்; வாள்தானே வெற்றி தரும்; இல்லை, வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோல், அதுவும் கோடாதெனின் என்றார்கள். யார் எதிரே இருக்கிறார்கள்! உடன்பிறந்தவர்களாயிற்றே, உன்னுடைய தந்தையாயிற்றே, உன்னுடைய பாட்டனாயிற்றே என்றெல்லாம் காட்டி இவர்களோடு நாம் போரிடலாம், இதுதான் கடமை என்று நீங்கள் போரிடத் தொடங்கிவிட்டால் எதிரே இருக்கின்றவர்களின் உறவு நம் கண்ணுக்குத் தெரியவேண்டியதில்லை. காரணம், கடமை என்று எண்ணத் தொடங்கிவிட்டால் மகன் என்றோ மற்றவர்களென்றோ, உறவினர்களென்றோ நாம் நினைக்கலாகாது. இது ஒருவகைப் பட்டது. நெடுங்காலத்துக்கு முன்பு கீதையில் சொன்னது. இதையே மனு அரசன் கூடத் தன்னுடைய மகன் என்று பாராமல் தேர்க்காலில் செலுத்தினான் என்று பார்க்கிறோம்!

Add a Comment