இந்தியப் பண்பாடு-10
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
நம்முடைய பண்பாட்டின் கூறுகள் எப்படியெல்லாம் நூல்களில் புதைந்துள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பழைய பாடலில் ஒரு வேந்தன் பாடுகின்றான்; எனக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நினைத்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்! மூத்த மகன்தான் வரவேண்டுமென்று கூறுவீர்கள். மூத்த மகன்தான் ஆட்சிக்கட்டிலில் அமர்வது முறை. உலகத்தில் மூத்தவன் என்ற சொல்லுக்கே தந்தைக்குப் பிறகு முடிசூட்டிக் கொள்கிறவன் என்றும் பொருள் கூறுவார்கள். ஆனால், இந்த வேந்தன் பாடுகிறபோது சொல்கிறான்,
‘‘மூத்தோன் வருக! என்று கருதாது அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’’ மூத்தவன் வரவேண்டுமென்பது முறையல்ல. விவரம் தெரிந்தவன் யார், செய்திகளைப் புரிந்தவன் யார், அறிவாற்றல் நிறைந்தவன் யார் என்ற வகையில் தக்கவனுக்கு முதன்மை தரவேண்டுமே தவிரப் பிறப்பால் மூத்தவன் என்பதால் மட்டுமே ஒருவன் பெருமையுடையவன் ஆகமுடியுமா என்று நினைக்கும் வேந்தன் பாடியிருக்கிறான்.
இது நம்முடைய பண்பாடு!

Add a Comment