இந்தியப் பண்பாடு-7
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
நண்பர்களே!
அரசராகட்டும், அறிஞர்களாகட்டும், பல்கலைக்கழகங்களாகட்டும், மக்களுக்கு இப்படியெல்லாம் பண்பாடு இந்த நாட்டில் தோன்றியது, இந்தச் சூழ்நிலையில் வளர்ந்தது என்பதையெல்லாம் விளக்கிக் காட்டும் ஒரு பணியை நாம் முறைப்படுத்தவேண்டும்.
இந்தியப் பண்பாட்டைப் பற்றி எண்ணத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு நிகழ்ச்சியை நான் சொல்ல விரும்புகிறேன்.
தாயன்பி என்ற பேரறிஞரை உங்களுக்குத் தெரியும். உலகப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர். அவரை அழைத்துவந்து நமது நாட்டில் ஒருமுறை பேசச் சொன்னார்கள். நான் சொல்வது நாற்பதாண்டுகளுக்கு முன்பு. அபுல்கலாம் ஆசாத் நினைவுச் சொற்பொழிவுக்காகத் தாயன்பி வந்திருந்தார்கள். நினைவுப் பொழிவை – முதல் சொற்பொழிவை நிகழ்த்தியவர் பண்டிட் ஜவஹருலால் நேரு.
தாயன்பி பேசத் தொடங்கும்போது,….

Add a Comment