POST: 2015-07-03T09:34:55+05:30

இந்தியப் பண்பாடு-4

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

அறிஞர் முன்சி அவர்கள் தான் ஓரிடத்தில் குறிப்பிட்டார்கள்! பழமை என்று சொன்னால் அமெரிக்கர்களுக்கு இல்லை. ரஷ்ய நாட்டினருக்குப் பழமை என்று சொன்னால் வெறுப்பு. எனவே, ரஷ்ய நாட்டுக்காரர்களுக்குத் தங்கள் பழமையை நினைத்தால் கோபம் வருகிறது. அமெரிக்க நாட்டுக்காரர்களுக்குத் தங்களிடத்தில் பழமை இல்லையே என்பதற்காக அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், நமக்கெல்லாம் வாய்த்த சிக்கல், நமக்குப் பழமை மட்டும் தான் இருக்கிறது! எனவே தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தோய்ந்து வருகின்ற மனப்பண்பாட்டை அவ்வப்போது நாம் வளர்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அவ்வப்போது அது உடைந்துபோகும் என்ற நிலைகூட உள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *