POST: 2015-05-24T10:48:08+05:30

இடதுசாரியினர் என்றாலேயே இடக்கானவர்கள் என்பது வெளிப்படை. பொதுவாக திராவிட – தன்மான இயக்கக் கருத்துக்களை எதிர்ப்பது அவர்கள் வழக்கம். பொதுமக்கள் என்பதையே வெகுஜன மக்கள் என்று எழுதுபவர்கள். இவர்கள் அன்மையில் தமிழில் கை வைக்கத் தொடங்கினார்கள். சிறுகதைகள் எழுதினார்கள். தங்களை முற்போக்கு வாதிகள் என்று கூறினர். இவர்கள் மனம் திராவிட இயக்கத்தை எதிர்ப்பது. சான்றாக வையாபுரிப் பிள்ளையை எந்த இடத்தில் மேற்கோள் காட்டினாலும் இவர்கள் யார் என்பது தெரிந்து விடும். காவல்கோட்டம் என்பதையே காவற்கோட்டம் என்று எழுதியிருக்க வேண்டும். இந்த அழகில் உ.வே.சா வைப்பற்றி எழுதுவதாக எண்ணி சமணத்தைப் புகழ்ந்திருக்கிறார். இராமசாமி முதலியார் சிந்தாமணியைத் தந்தது, சைவ சிந்தாந்தப் பெருமன்றத்தினர் சீவக சிந்தாமணியை அழகுறப் பதிப்பித்தது. உ.வே.சாவே சிந்தாமணியைப் பதிப்பித்தது இவைகளெல்லாம் சைவர்கள் மனத்தில் சமண வெறுப்பு இல்லாமையைக் காட்டும். ஞானசம்பந்தர் தமிழ் ஞானசம்பந்தர் என்று திருமுறைகளில் ஐம்பது இடங்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இவைகளெல்லாம் வெங்கடேசனுக்கு விளங்காது. இதை விகடன் வெளியிடுவது ஒன்றே இவர்களுடைய தமிழ் எதிர்ப்பின் தகைமையைக் காட்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *