இன்று பெருங்கவிக்கோ சேக்ஸ்பியருடைய 452வது
பிறந்த நாள் (23ஏப்ரல்)
‘‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ!
உனது படைப்புகள் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட ஏனைய பெரும் புலவர்களுடைய படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது.
பகலவனின் பேரொளிப் பிழம்பு,
ஆரவாரிக்கும் அளப்பரிய பெருங்கடல்,
விண்ணெங்கும் வாரி இரைக்கப்பட்ட விண்மீன் கூட்டம்,
பூத்துக் குலுங்கும் வண்ண மலர்த் தோற்றம்,
பொழிந்துறைந்த பனித்திரள்,
பெய்யெனப் பெய்த மழை
மரஞ்செடிகளின் இலைகளில் திரண்ட திவளைகள்,
சுழன்றடிக்கும் சூறாவளி,
பெருங்குரலெடுத்துறுமும் இடியேறு போன்ற இயற்கைத் திருநடனங்களை ஒத்தவை;
புலனனைத்தையும் அடக்கி ஒடுக்கி முழுச் சரணடையும் பொழுது மட்டிலுமே மூளைக்கு எட்டக் கூடியவை!’’

Add a Comment