POST: 2015-01-03T08:19:21+05:30

1997 குமுதம் செய்தி-பால்யூ

ஔவை என்கிற பெயரைவிட பெரிய விருது கிடைக்கப் போகிறதா என்ன?

தமிழறிஞர்க்கு சர்வதேச விருது

தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசனுக்கு அமெரிக்காவில் உள்ள உலக அமைதிக் கல்வி நிறுவனம் இலக்கிய மேதை என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.இந்த நிறுவனம் ஆண்டுதோறும் நாடறிந்த ஒருவர்க்கு இந்த விருதை வழங்கி வருகிறது.பெர்க்லி நகரில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.ஒரு தமிழர்க்கு இந்தக் கௌரவம் அளிப்பது முதல் தேவை.ஔவை நடராஜன் சிறந்த பேச்சாளர் என்ற வகையிலும் உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெற்ற போது சிறந்த இலக்கியப்பணி ஆற்றினார் என்பதற்காகவும் கௌரவித்திருக்கிறார்கள்.

விருது கிடைத்தது பற்றி ஔவை நடராஜன் கூறுகிறார்:

விருதுகள் கொடுக்கப்படும்போது அதைக் குறை கூறுவது நல்ல பண்பாடு ஆகாது.விருது
வழங்குகிறவர்களின் நோக்கம் உயர்ந்தது என்றே கருத வேண்டும்.இந்த விருதை என்னுடைய இலக்கியப்பணி மற்றும் நாடறிந்த பேச்சாளர் என்பதற்காக வழங்கியிருக்கிறார்கள்.பன்னாட்டு
அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு விருது வழங்க முடிவு செய்திற்கும் போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.இதை ஓர்
ஆரவாரம் இல்லாத விருதாகவே ஏற்றுக்கொள்ள
விரும்பிகிறேன்.ரைட் ஆனரபிள் என்ற வார்த்தையைக் கேட்டதும் மகா கனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியாரின் நினைவு எனக்கு வருகிறது.அவரை Silver tongue orator of the east என்று ஆங்கிலேயர் பெருமையுடன் போற்றினார்கள்.அந்த வெள்ளி நாக்குப் புலமைக்கு முன் நான் ஒரு கடுகு மாதிரி என்று உணர்கிறேன்.பட்டங்களும்,விருதுகளும் ஒரு மேடைப் பேச்சாளர்களுக்கு பேசத் துவங்குமுன் அணிவிக்கிற மலர் மாலையைப் போலத்தான்.அதை நெடுநேரம் கழுத்தில் போட்டுக்கொண்டு பேசினால் சபையினர் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள்.மாலையைக் கழட்டி வைத்துவிட்டு அதையே நினைத்துக்கொண்டிராமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.என் பெயரோடு ஒட்டிக்கொண்டு என்று என்றைக்கும் என்னைப்பெருமைப்படுத்தும் ஔவை என்கிற பெயரைவிட பெரிய விருது கிடைக்கப் போகிறதா என்ன? நான் மதித்துப் போற்றிவரும் என் தந்தை ஔவை துரைசாமி அவர்கள் பெயரின் ஒரு பகுதி அல்லவா ஔவை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *