POST: 2014-11-08T11:15:28+05:30

பழங்கலைகள்,பழம்பொருள்கள்,அரிய நூல்கள்,ஆற்றல் வாய்ந்த உரைகளை வாய் திறந்தால் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Churchill) பேசுவது எப்படி என்று ஒலித்துக்காட்டும் மாட்சி, சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson)எப்படி இருந்திருப்பார் என்ற சுந்தரம் (Sundaram IAS )அவர்களின் தோற்றம்…

அவரின் நூலகத்தின் முக்கால்ப்பகுதியை பத்து இலட்சம் ரூபாய்க்கு நினைவில் வாழும் அருட்செல்வருக்கு விலையாக தந்தார்

.இந்திய நாட்டின் நாட்டுப்பண்(தேசிய கீதம்) பாடுவதை எப்படி ஒலிக்க வேண்டும் என்பதற்கு ஒரு படை வீரரைப்போல நின்று முழங்குவார்.

அவர் ஒருஆய்வாளராக சென்றிருந்தால் எப்போதோ ஒரு சிந்தனையாளராகப் பெரும் புகழோடு விளங்கியிருப்பார்.அரசியல் அவரையும் அலைக்கழித்தது,தாமாகவே இந்திய ஆட்சிப்பணி (IAS)பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.அந்த கருத்துக்கருவூலம் மறைந்து விட்டார்.மனைவியைப் பிரிந்த துயரம் தாங்காமல் அந்த மாளாத துயரத்தை ஆங்கிலக்கவிதைகளாக அழகுற நெஞ்சம் நெகிழ புனைந்தார்;பத்மா என்ற ஒலக்குரலோடு மறைந்தார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *