POST: 2014-11-07T09:39:43+05:30

நேர்காணல்-14.3.2011

கேள்வி-4: அகத்தியம் என்ற இலக்கண நூல் தமிழில் இல்லை. இன்னும் நிறைய சங்க இலக்கியப் பாடல்களிலே சில வரிகள் இல்லை. சில பாடல்கள் இல்லை என்ற நிலையெல்லாம் இருக்கிறது. இந்தநிலையில் இந்தத் தேடலினுடைய ஏதேனும் ஒரு விளைவாக எங்கேனும் நாம் தொலைத்தவற்றில் மீட்டெடுப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்ற நம்பிக்கை ஒருசிலரிடம் இருக்கிறது இன்னுங்கூட, அந்த நம்பிக்கை என்றாவது நிறைவேறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்-4: நம்புவதற்கு நான் என்ன விடைசொல்ல முடியும். அறிவார்ந்த துணிவு இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தே தவிர, நான் நம்புகிறேன் என்றால் என்ன பொருள். ‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது தமிழ். விருப்பம் இருக்கிறதென்று சொல்லுங்கள். இந்த விருப்பத்தினால், நமக்கு ஒரு நல்ல வெற்றி விளைந்தால் நானும் மகிழ்வேன்.

புதுமையை நோக்கிப் புறப்படுகின்ற உலகத்தில் நாம் இன்னும் புதியவற்றை எப்படித் தமிழுக்குச் சேர்ப்பது என்பதும், இறவாத புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும், மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை என்ற தொடரைவிடவா இனித் தமிழ்மொழி வளர்ச்சியைப் பற்றி நாம் நினைக்கமுடியும். பாரதியார் என்ன கருத்தில் இப்படிச் சொன்னாரோ என்பது தெரியவில்லை ‘போலிச் சுவடிகளையெல்லாம் பொசுக்கிட வேண்டுமென்றான்’ என்று கண்ணன் என் தந்தையில் ஒரு தொடர்வருகிறது. இதுதான் என்னுடைய கருத்து. அப்படி இந்தக் கருத்தில் மாற்றம்வந்து பிறர்சொன்னால், நான் எப்போதும் ஏற்றுக்கொள்ள விருப்பமாகவே இருப்பவன். மிக்க நன்றி.

நல்ல சுவடி எது? போலிச்சுவடி எது? என்று கண்டுபிடிப்பதற்கு முதலில் எல்லாச் சுவடிகளையும் நாம் திரட்டுவது ஒரு அடிப்படைப் பணியாக இருக்கலாம். அந்த வகையில் முதலில் திரட்டுவோம். பிறகு, அவற்றில் போலிச்சுவடிகளைக் கண்டறிந்து, அதன்பிறகு அவற்றை என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு செய்யலாம் என்பதாக எனக்கு ஒரு கருத்து உண்டு. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி. நாம் மீண்டும் சந்திப்போம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *