பழக்கவழக்கங்களின் செல்வாக்கினாலும்,காரண காரியத் தொடர்புகளின் விளைவுகளைப் பகுத்தறிந்துகொள்ள இயலாமையாலும்,புனித நதி என்று நம்புகிற ஒரு நதியில் நீராடுவதும்,குறிப்பிட்ட ஒரு மரத்தை வழிபடுவதும்,ஒரு குறிப்பிட்ட துறவியைப் போற்றி வணங்குவதும் தான் மோட்சத்திற்குரிய வழிமுறைகள் என்று நமது மக்கள் நம்புகின்றனர்.மேலும்,தாங்கள் செய்த கொடிய வினைகளுக்குக் கழுவாயாக மத குருமார்களிடம் அவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்து பாவமன்னிப்பைப் பெற்றுவிடலாமென்றும்,கடவுள் தண்டனையிலிருந்து தப்பிவிடலாமென்றும் அவர்கள்
முயல்கின்றனர்.இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தாங்கள் செய்த பாவங்களைக் கழுவி விட்டு,வீடு பேற்றை எளிதில் பெற்றுவிட முடியும் என்று மக்கள் நம்புவது வியப்பிற்குரிய
செய்தியாகும்.

Add a Comment