கட்டுக்காகிதங்களும்,பொன்னாடைத்துண்டு தோளில் ஊசலாட சரிகைத்தலைப்பாகையுடன் அன்றாடம் உட்லண்டு உணவகத்திற்கு வந்த பி ப பி ஸ்ரீநிவாஸ் ஏழு மொழிகளில் பாடல் எழுதுவார்,பாடுவார்.
கன்னடப்பாடகர் என்ற வகையில் உட்லண்டு உணவகம அவரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விருந்தினராக ஏற்றுக்கொண்டது.
மயக்கமா,கலக்கமா,தயக்கமா என்ற பாடல் பாடியவர் காலம் முடிந்து கரை சேர்ந்து விட்டார்.
அசை,சீர் பிரிப்பதை என்ன சொல்லலாம் என்று ஒரு முறை என் தந்தையிடம் அவர் கேட்டபோது அளகிடுதல் என்றாராம்.அதை நினைவு கூர்ந்து குறைந்தது ஆயிரம் முறை அவர் சொல்லி மகிழாத நாளில்லை.சொல்லின் புகழ்ச்சிக்கில்லை.அவருடைய நன்றியுணர்ச்சியைக்காட்டுவதற்காக இதனை எழுதுகிறேன்

Add a Comment