POST: 2013-04-10T15:26:02+05:30

கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாந் தான் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
ஏனடா நீ நேற்றைக்(கு) இங்கு வரவில்லை யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்.
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
ஓயாமற் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்கவொன்று செய்வார்.
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்.
உள் வீட்டுச் சேதியெலாம் ஊரம்பலத்(து) உரைப்பார்.
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
சேவகராற் பட்ட சிரம மிகவுண்டு கண்டீர்.
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை!

என்பது பாரதியாரின் பாடல்.ஊடங்கங்கள் பெருகிய பிறகு இம்மென்றால் ஏழு கதைகள்,ஏனென்றால் பத்து
விளக்கங்கள் நாடெல்லாம் பரவுகின்றன.கையை நீட்டினாலும் எவன் கன்னத்தையோ அறைகிறார் என்கிறார்கள்.
ஊடகத்தில் பொய் தான் ஊர்வலம் வருகிறது.உண்மை ஒளிந்து கொள்கிறது

பொய்யும் உண்மையும் புனலாடப்போனார்கள்.பொய் விரைவில் குளத்தை விட்டு எழுந்து வெளியே வந்து மெய்யின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.அய்யோ! பாவம் மெய் தண்ணீரிலேயே தவித்துக்கொண்டிருந்தது.இப்படித்தான் Naked Truth என்ற ஆங்கிலத்தொடர் பிறந்தது….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *