இன்னறைய குடியரசுத்தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் எங்கள் குடும்பம் ஆசிரியர் தலைமுறையைச்சார்ந்தது என்று கூறியதோடு தானும் ஆசிரியராகவே மாற விரும்பியதாக நெகிழிந்து குறிப்பிட்டுள்ளார்.
இளம் பருவத்தில் தாய் தந்தையர் அன்றி உலகியியலைப்பற்றி ஒன்றும் தெரியாத குழந்தைகளுக்கு நல்லியல்புகளையும்,நல்லுணர்வுகளையும் கற்றுத்தருவதிலே தான் மொழியின் அரும்பு நிலை தொடங்குகிறது.களிமண்ணாக அமைவதை, நாம் கருதும் கலை வடிவங்களாக மாற்றுவது ஆசிரியர்களின் மாறாக் கடமையாகும்.
இப்போதைய அறிவியல் வளர்ச்சியில் எழுத்துக்களை கூட்டிப்படிப்பது,பிழையில்லாமல் ஒலிப்பது,எழுத்து வரிசை அமைப்பின் உட்பொருளை விளக்குவது முதலிய வகையில் உளவியல் சமூகவியல் தொடர்பையும் கல்விக்கற்பித்தலில் நாம் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்….

Add a Comment