POST: 2012-10-24T12:04:01+05:30

கொடுங்கோலன் வழங்கிய குதிரை
——————————————————————————–
என் கணவரின் அண்ணன் வீர சக்கர விருதுப்பெற்ற போர்த்தளபதியாக இருந்தவர்.அவருக்கு நூல் எழுதும் ஆர்வமும் இருந்தது.

போர்ப்படையின் நுணுக்கத்தின் முதன்மைக்குறிப்புகள் (Essentials on Military Knowledge)என்பது நூலின் பெயர்.ஆங்கில நூலைப்பார்த்த லிபியா நாட்டின் அதிபர் கடாபி ஆங்கில நூலை அராபிய மொழியில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தாராம்.

ஆங்கிலம் தெரிந்தவர்களை மொழி பெயர்த்தாலும் மூல நூலாசிரியரின் கருத்தை நுட்பமாக அறிய வேண்டுமென்பதற்காக நம்மூர்த்தளபதியையும் லிபியாவுக்கு அழைத்திருந்தாராம்.

போர்த்தளபதியின் பொழுதுபோக்கு கோற் பந்தாடுவது (Polo)குதிரைகளின் மேல் இருந்தபடி கோற் பந்தாட விரும்பினாராம்.அவர் விருப்பத்தை உடனே நிறைவேற்றுவதற்காக இத்தாலிய நாட்டுக்குதிரைகள் இரண்டினை அவர் விளயாட்டிற்கு வைத்துக்கொள்ள சொன்னார்களாம்.

இந்தியா திரும்பும் பொழுது உங்களுக்கென வாங்கிய 2 குதிரைகளை நீங்கள் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்கிறோம் என்றார்களாம்.நன்றி சொல்லி வேண்டாமென்று திரும்பி விட்டார் போர்த்தளபதி

புலவர்க்கு யானை கொடுப்பதை நாம் சங்கப்பாடல்களில் படித்திருக்கிறோம்.அயல் நாட்டுத் தளபதிக்கு இப்படி பரிசுத் தருவது வியப்பாகும்!

சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் ஓராண்டு நினைவை நினைவு கூர்ந்து திருமதி சுதா பாலித் இக்குறிப்பை எழுதியதோடு அராபிய மொழிபெயர்ப்பு ஊர்ப்புரட்சியில் எரிந்து கருகி போய் இருக்கலாமென்றும் குறித்திருக்கிறார்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *